நான் ஒரு முறை கடலூர்-ரிலிருந்து புதுவை-ககு பயணம் செய்ய நேர்ந்துது. 40 நிமிடம் பயணம் தான். வண்டியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. உட்கார இடம் கிடைக்காததால் நின்றுகொண்டு வந்தேன். நான் புதுவை செல்லும் வழியிலேயே இறங்கும் நோக்கத்தினால், பேருந்தின் நடுவில் சென்று நிற்காமல் ஓட்டுனரின் அருகில் சென்று நின்றுகொண்டேன். வண்டி நகர தொடங்கியதில் இருந்து நான் இறங்கும் வரையில், தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயணிகளை ஏற்றினார்கள். அது கூட பரவா இல்லை. நாம் சென்னை நகர பேருந்திலேயே பயணம் செய்து இருக்கிறோம், ஆதலால் நான் இதை ஒன்றும் பெரியதாக எடுத்துக்கொள்ள வில்லை.
ஆனால் அந்த பேருந்தை ஓட்டுனர் ஒட்டிய விதம் தான் என்னை எரிச்சல் அடைய வைத்தது. கடலூர்-ரில் ஆரம்பித்த ஒலி(Horn) சத்தம், நான் இறங்கும் வரையில் ஒலித்து கொண்டே இருந்தது. அவர் Stearing-ல் கை வைத்த நேரத்தை விட ஒலிப்பான்(Horn)- நில் கை வைத்த நேரமே அதிகம்
வண்டியில் இருந்த அனைவரின் காதிலும் அந்த 40 நிமிடம் Horn சத்தத்தை விட வேறு சத்தம் எதுவும் விழவே இல்லை. ஓட்டுனர் அருகில் நான் இருந்ததனால் அவருடைய எண்ணங்களை என்னால் உணர முடிந்தது.
அவருடைய எண்ணங்களில் சில
- வழியில் எந்த ஒரு வாகனமும் இருக்கக்கூடாது.
எதற்காகவும் வண்டி வேகத்தை குறைக்க கூடாது - ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தால், தாம் தான் இந்த சாலைக்கு ராஜா
- மற்றவர்களுக்கு எதுவாயினும் பரவாஇல்லை, எந்த சாலை விதியையும் கடை பிடிக்க கூடாது
அன்று அந்த ஓட்டுனர் மீது இருந்த வெறுப்பில் அவருடைய புகை படத்தை என்னுடைய கைபேசி-இல் எடுத்து வெளியிட்டு உள்ளேன்.
இவர்கள் என்று தான் திருந்த போகிறார்களோ என்று தெரிய வில்லை
1 comment:
Yes i agree there are some drivers like that but they also have constraint to drive bus like this bcos of their owners. Every 5 mins there is bus between pondy and cuddalore they need to be on correct time to pickup passenger otherwise there will be lose to owner so ultimately driver and conductor will be punished. This is thing both government should take care seriously.
Post a Comment